/* */

உடனடி வேலை வாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்!

மருத்துவம், பொறியியல், கால்நடை படிப்பு என்றில்லாமல், துணை மருத்துவப் படிப்பு களுக்கும் எப்போதும் தேவை இருந்து வருகிறது.

HIGHLIGHTS

உடனடி வேலை வாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்!
X

பைல் படம்

பொதுவாகவே, படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலையும், அதன்மூலம் பொருளீட்டுவதையும் எதிர்பார்ப்பது இயல்பு தான். எனினும், சில பணிகள் வெறுமனே வேலை என்பதை தாண்டியும் மன நிறைவைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும். அதில், நர்சிங் (செவிலியர்) பணிக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. செவிலியர்கள் வேலை செய்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் சேவை செய்கின்றனர் என்று சொல்வது தான் சாலப் பொருந்தும். ஒரு நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் என்பவர் கிட்டத்தட்ட பாதி மருத்துவருக்கு சமம். வாழ்கின்ற நைட்டிங்கேல் மட்டுமின்றி, வாழ்கின்ற தெரசாக்களும் கூட செவிலியர்கள் தான் என்றால் மிகையாகாது.

கிழக்கிந்திய கம்பெனிகளின் வருகைக்கு பிறகே இந்தியாவில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் உருவாகத் தொடங்கினர். அதனால், இத்துறையில் கிறித்தவ பெண்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். இன்றைய நிலையில், ஆண்களும் செவிலியர் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டினாலும்கூட, இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது என்னவோ பெண்கள் தான். அவர்களுக்கு ஏற்ற துறைகளுள் நர்சிங் படிப்பும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நர்சிங் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளை கண்காணிப்பதில் இருந்து, தரமான செவிலியர்களை உருவாக்குவது வரை இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council - INC) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐஎன்சி, நோயாளி - செவிலியர் விகிதாச்சார கணக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மூன்று நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள ஒரு செவிலியர் தேவை என்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டுமே உடனடியாக 4 லட்சம் செவிலியர்களுக்கு பணித் தேவை இருக்கிறது, என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் செவிலியர்கள் அரசு மற்றும் அதைச் சார்ந்த மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியால் செவிலியர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஹோம் நர்சிங், இண்டஸ்ட்ரியல் நர்சிங் என செவிலியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. தவிர, வளைகுடா நாடுகள், இந்திய நர்சுகளுக்கு கைநிறைய சம்பளத்தை கொடுத்து பணிக்கு அமர்த்தி கொள்கின்றன. கேரளாவில் உருவாகும் நர்சுகளில் கணிசமானோர், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுவது இப்போதும் தொடர்கிறது.

இப்படி எல்லா காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த செவிலியர் படிப்பில் சேர்வது எப்படி, அதற்கான பயிற்சி மையங்கள், படிப்பின் கால அளவு உள்ளிட்ட தகவல்களை இனி பார்க்கலாம்.

படிப்பின் விவரம்:

B.Sc., Nursing - 4 Years

B.Sc., (Honors) Nursing - 4 Years

Bsc (Post Basic) Nursing - 4 Years

Diploma in Nursing and Midwifery - 3 Years

Diploma in Ayurvedha Nursing and Pharmacy - 2 1/2 எஅர்ஸ்

(Diploma in Nursing - படிப்பு இந்த கல்வியாண்டிலிருந்து நிறுத்தம்)

கல்வித்தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு செவிலியர் கல்லூரிகளில் சேரும் நடைமுறை:

1. எய்ம்ஸ் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு. இதன் விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மத்திய அரசின் செவிலியர் கல்லூரிகள் புது டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிசிகேஷ் ஆகிய இடங்களில் உள்ளன. (AIIMS–All India Entrance Test – www.aiimsexams.org. (New Delhi, Bhopal, Bhubaneswar, Jodhpur, Patna, Raipur, Rishikesh).

2. ஜிப்மர் நுழைவுத்தேர்வு - கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

3. நேஷனல் இன்ஸ்டிடியூப் ஆப் ஆயுர்வேதா, ஜெய்பூர் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு. இதுகுறித்த விவரங்களுக்கு: www.nia.nic.in (National Institute of Ayurvedha, Jaipur- All India

Entrance Exam – www.nia.nic.in)

4. Armed Forces Medical College, Pre-medical Test – Pune www.afmc.nic.in

5. 5. Health Education and Research Council of India – www.herci.in

தமிழக அரசின் செவிலியர் கல்லூரிகளில் சேருவதற்கான நடைமுறை: மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு மூலமாக பிளஸ்-2வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் செவிலியர் படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும்.

இணையதள முகவரி: www.tnhealth.org செவிலியர் கல்லூரிகள் எண்ணிக்கை: 1. அரசு செவிலியர் கல்லூரிகள் - 15 (சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன).

2. தனியார் செவிலியர் கல்லூரிகளின் எண்ணிக்கை - 156

3. சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை - 6

கல்வியின் பயன்பாடு:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றலாம். எம்.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட உயர்கல்வியும் படிக்கலாம். நர்சிங் பயிற்சி முடித்தோருக்கு வெளிநாடுகளில் எப்போதும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

ஸ்டாஃப் நர்ஸ், உதவி செவிலியர் கண்காணிப்பாளர், துணை செவிலியர் கண்காணிப்பாளர், வார்டு சிஸ்டர், வார்டு கண்காணிப்பாளர், செவிலியர் பயிற்சி மைய இயக்குநர், நகர்ப்புற சுகாதார செவிலியர் என பல நிலைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

செவிலியர் படிப்பை முடித்தவுடனேயே உள்ளூரிலேயே முன்னணி தனியார் மருத்துவமனைகளில் 7000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான ஊதியத்தில் பணி வாய்ப்பை பெறலாம். 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னணி மருத்துவமனைகளில் 20,000 ஆயிரம் முதல் 30,000 ரூபாய் வரையிலும், கூடுதல் அனுபவம் மிக்கவர்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் ஊதியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்!

2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ துணைப்படிப்புகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicailseletion.org என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.

Updated On: 18 May 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்