/* */

ஐயப்பன் கோவில் மண்டல பூஜை - சபரிமலைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாத மண்டல பூஜை விழா துவங்க உள்ளது. இதையொட்டி, முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவிற்கு சபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஐயப்பன் கோவில் மண்டல பூஜை -  சபரிமலைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
X

ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக, சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.

சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு 3 சபரிமலை சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06061) வரும் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் (புதன்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு இரவு 8.33 க்கு வந்து சேர்கிறது. அதன்பின், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 9.30க்கும், திருப்பூருக்கு இரவு 10.10க்கும், போத்தனூருக்கு இரவு 11.28க்கும் சென்று பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், காயங்குளம் வழியே கொல்லத்திற்கு, மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06062) வரும் 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் (வியாழக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின் சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோல், சென்னை எழும்பூர்- கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06063) வரும் 18, 25 டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து, 2 நிமிடத்தில் புறப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், பாலக்காடு வழியே கொல்லத்திற்கு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06064) வரும் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8,15, 22, 29 ஆம் தேதிகளில் (ஞாயிறுதோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது.

சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06065) வரும் 21, 28 டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23ம் தேதிகளில் (திங்கட்கிழமைதோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து செல்கிறது. கொல்லத்திற்கு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06066) வரும் 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24ம் தேதிகளில் (செவ்வாய்தோறும்) இயக்கப்படுகிறது.

கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர்சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று (11ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 12 Nov 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  2. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  3. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  4. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  5. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  6. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  8. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  9. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  10. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்