/* */

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்க அறிவிப்பு

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்க அறிவிப்பு
X

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம் கோட்டம்) பஸ் (பைல் படம்)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (கும்பகோணம்) மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28 -8- 2022 முதல் 9-9- 2022 வரை திண்டுக்கல், சென்னை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கும் அதே போன்று மேற்கண்ட ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் திரும்பச் செல்ல வேளாங்கண்ணியில் இருந்து 28 8 2022 முதல் 9/9/2022 வரை இரவு பகல் எந்நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Updated On: 23 Aug 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்