/* */

ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நோ: தென்னக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!

அக்னிபத் போராட்டம் எதிரொலியாக ரயில் நிலையங்களில் வன்முறைகளை தடுக்க தென்னக ரயில்வே நிர்வாகம் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை நிறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நோ: தென்னக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!
X
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

மத்திய அரசு, அக்னிபத் திட்டத்தை முப்படைகளில் அமல்படுத்தியது. இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு 2 லட்சம் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.

வட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளுத்தினர். இந்நிலையில், சென்னையில் தெற்கு ரயில்வே நிர்வாகம், தமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அக்னிபத் போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்க தென்னக ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்துக்கொண்டு, போராட்டத்தின ரயில் நிலையங்களில் கும்பல் சேர்ந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Updated On: 20 Jun 2022 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்