/* */

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 250 நிலையான தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

மாதிரி படம்

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 250 நிலையான தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம்கள் 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

ஒரு முகாமுக்கு 4 பணியாளர்கள் வீதம் மொத்தம் 270 முகாம்களுக்கு 1,080 பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்மந்தமான நோய் உள்ளவர்கள், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 38 ஆயிரத்து 27 பேர், இரண்டாம் தவணை 5 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் என மொத்தம் 10 லட்சத்து 55 ஆயிரத்து 277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் செலுத்த ஆவண செய்ய வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 20 Jan 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  3. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  4. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  6. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  8. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  9. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  10. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்