/* */

உதகையில் சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உடற்தகுதியின் சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

உதகையில் சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
X

உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி உதகை தாவரவியல் பூங்கா சாலையில் நடைபெற்றது.

மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில், பிட் இந்தியா என்ற உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி உதகை தாவரவியல் பூங்கா சாலையில் நடைபெற்றது.

உடற்தகுதியின் சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வலுவான மற்றும் திறமையான நாடு மற்றும் ஒரு சுறுசுறுப்பான தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வோம் என உடற்பயிற்சியின் அவசியத்தை குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

எச்.ஏ.டி.பி. மைதானம் முன்பு இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் சந்திப்பு, மதுவானா சந்திப்பு வழியாக மீண்டும் மைதானம் வரை ஓட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அலுவலர் சஞ்சய் செட்டே, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர். நவீன காலத்தில் இளைஞர்கள் தங்களது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுதந்திர ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Updated On: 25 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...