/* */

ஊட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை நாளான இன்று ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

HIGHLIGHTS

ஊட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
X

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை காண வருகை புரிகின்றனர். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் மைசூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான இன்று உதகையில் இருந்து மைசூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள படப்பிடிப்பு தளம் மற்றும் பைக்காரா படகு இல்லத்தில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். பைக்காரா படகு இல்லத்தில் அதிவேகப் படகுகள், இயந்திரப் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

உதகை மைசூர் சாலையில் உள்ள ஷூட்டிங் மட்டம் சூழல் சுற்றுலா பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. மேலும் உதகை படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களிலும் வார விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தற்போது உதகையில் இதமான காலநிலை நிலவுவதை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதனிடையே வரும் நாட்களில் மேலும் ஒரு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Updated On: 6 March 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்