Begin typing your search above and press return to search.
உதகையில் முன்னாள் ராணுவத்தினரின் குடியரசு தின விழா
இவ்விழாவில் சுற்றுலா பயணிகள் படகு இல்ல ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS

முன்னாள் ராணுவத்தினரின் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட வீரர்கள்.
நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், 73-வது குடியரசு தின விழா உதகை படகு இல்லத்தில் நடந்தது. விழாவில் நலச்சங்க தலைவர் சீனிவாசன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சமூக சேவை புரிந்த தனிநபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், படகு இல்ல ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.