/* */

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: உதகையில் 185 டன் குப்பை அகற்றம்

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகையில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி உள்ளது என்றனர்.

HIGHLIGHTS

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: உதகையில் 185 டன் குப்பை அகற்றம்
X

உதகையில் 185 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. 

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையை ஒட்டி 4 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். வழக்கமாக உதகையில் தினமும் 30 டன் குப்பை சேகரமாகும். லாரி மூலம் குப்பைகளை அப்புறபடுத்தப்பட்டு வருகின்றன. வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், குப்பை அதிகரித்தது. உதகை நகராட்சி மார்க்கெட்டில் சேகரமான குப்பைகள் அகற்றப்படாமல், காய்கறி, பழக்கழிவுகள் அப்படியே குவிந்து கிடந்தன. இதனால் தூர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மார்க்கெட்டில் குவிந்து கிடந்த குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் நகராட்சி லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, உதகை நகராட்சியில், கடந்த 5 நாட்களில் மொத்தம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 420 கிலோ (185 டன்) குப்பை சேகரமானது. அவற்றை பணியாளர்கள் அகற்றி தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று கொட்டினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகையில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி உள்ளது என்றனர்.

Updated On: 19 Oct 2021 10:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!