/* */

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கடனுதவி : நீலகிரி கலெக்டர் தகவல்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் கடனுதவி தரப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கடனுதவி : நீலகிரி கலெக்டர் தகவல்
X

இது குறித்து, நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் ஒருவர், கொரோனா தொற்றால் உயிரிழந்து இருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம்" smile" என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில், திட்டத்தொகை அதிகபட்சமாக 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று இறந்ததற்கான ஆவணங்களுடன், ஊட்டியில் உள்ள மாகலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை, வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 9 July 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்