/* */

உதகை மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா: கோர்ட் மூடல்

உதகமண்டலம் நகராட்சி சார்பில், கோர்ட்டு வளாகத்தில், வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகை மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா: கோர்ட் மூடல்
X

உதகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து, அரசு அலுவலகங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணிக்குத் திரும்பி உள்ளனர். அவ்வகையில், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதகை நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பொங்கல் விடுமுறை முடிந்து வந்தபோது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பரிசோதனை முடிவில், நீதிமன்றத்தில் பணிபுரியும் சார்பு நீதிபதி உட்பட ஊழியர்களுக்கு 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உதகை நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் மூடப்பட்டது. நீதிமன்ற ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. உதகமண்டலம் நகராட்சி சார்பில், கோர்ட்டு வளாகத்தில் பெல் மிஸ்டர் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Updated On: 21 Jan 2022 8:57 AM GMT

Related News