/* */

குன்னூரில் தொழிற்பயிற்சி கல்லூரிக்குள் புகுந்த காட்டெருமை கூட்டம்

குன்னூரில் தொழிற்பயிற்சி கல்லூரிக்குள் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

குன்னூரில் தொழிற்பயிற்சி கல்லூரிக்குள் புகுந்த காட்டெருமை கூட்டம்
X

தொழிற்பயிற்சி நிலையத்தில் புகுந்த காட்டெருமைகள். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக வனவிலங்குகள் நடமட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்புக்கு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தொழில் பயிற்சி கல்லூரியில் காட்டெருமை புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் நுழைவாயிலில் கூட்டமாக புகுந்த காட்டெருமையால் தொழில் பயிற்சி நிலையத்திற்கு அதிகாரிகள் செல்ல முடியாமல் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு காட்டெருமைகளைவனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். அவ்வப்போது வரும் காட்டெருமைகளால் வாகன ஓட்டுனர்கள் மட்டுமில்லாமல் காலை மட்டும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோறும் பாதிப்பதாக புகார் தெரிவித்தனர்‌.


Updated On: 25 Nov 2021 10:30 AM GMT

Related News