உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

மசினகுடி அருகே விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி. காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
X

காட்டு யானை தாக்கியதில் பலியான மூதாட்டி சரசம்மாள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியில் வசித்து வரும் சரசம்மாள் என்ற மூதாட்டி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியிலிருந்த காட்டு யானை மூதாட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு நேரமாகியும் சரசம்மாள் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வன பகுதிக்குள் சென்று தேடிய போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சீகூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 Nov 2021 3:59 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு
 2. ஸ்ரீரங்கம்
  திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
 3. ஸ்ரீரங்கம்
  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நாளை தொடக்கம்
 4. திருவெறும்பூர்
  திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
 5. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 6. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 7. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 8. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 9. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை
 10. கடலூர்
  கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம்