/* */

முதுமலையில் யானைகளுக்கு மருத்துவ சோதனை

முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு ரத்தம் உட்பட பல்வேறு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

முதுமலையில் யானைகளுக்கு மருத்துவ சோதனை
X

யானைகளின் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் மருத்துவர்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக யானைகள் காப்பகத்தில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து காலை, மாலை என இருவேளைகளிலும் அந்த யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் உட்பட ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வளர்ப்பு பிராணிகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வரும் நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இயங்கிவரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து விஞ்ஞானிகள் முதுமலைக்கு வருகை தந்துள்ளனர். இரண்டு நாட்கள் தங்கி இருந்து 28 யானைகளுக்கும் பல்வேறு மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

குறிப்பாக யானையின் தும்பிக்கையில் உள்ள சளி, யானையின் காது பின் பகுதியில் உள்ள ரத்தம் மாதிரி, யானையின் எச்சம் மேலும் யானைகளுக்கு ஏதும் காயங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து சேகரிக்கப்படும் ரத்தங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரிகள் மீண்டும் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு கொண்டு அங்குள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு ஆய்வுகள் துல்லியமாக நடத்தப்படும் எனவும், அதன்பிறகு அந்த அறிக்கை முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டு அந்த அறிக்கையில் இருக்கும்படி ஒவ்வொரு யானைகளுக்கும் வேறு மாதிரியான நோய்கள் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கான உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இன்று முதுமலைக்கு வந்த விஞ்ஞானிகள் மற்றும் இங்குள்ள கால்நடை மருத்துவர் உட்பட அனைவரும் இணைந்து யானைகளுக்கு மாதிரிகள் எடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

Updated On: 27 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?