/* */

கோவை கார் வெடிப்பு: 45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

NIA Raids Today -கோவை கார் வெடிப்பு தொடரபாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. மீண்டும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோவை கார் வெடிப்பு:  45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
X

NIA Raids Today -கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் ஜமேஷா முபின் என்பவர் கார் வெடித்து சிதறி பலியானார். காரில் வெடி பொருட்களை நிரப்பி எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டிருந்தகாக கூறப்படுகிறது. ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது வீட்டில் சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டில் 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை கைப்பற்றினர். இது தொடர்பாக அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவல்துறை கைது செய்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.

கோவையில் உக்கடம் அருகே புல்லுக்காடு பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் வீடு வீடாக சோதனை நடந்து வருகிறது. கோட்டைமேடு, போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம் ஆகிய இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது. பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், காயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது. சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமலைவாசலில் உள்ள அல் ஃபாசித் என்பவரது வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு இருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐந்து மணிநேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, என்ஐஏ குழு இரண்டு மொபைல் போன்கள், ஒரு பென் டிரைவ், ஒரு சிடி மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அல் ஃபாசித் நான்கு மாதங்களுக்கு முன்பு என்ஐஏ குழுவினரால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!