/* */

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அடுத்தடுத்து 'செக்'..! (Exclusive)

தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த பின்னரே விற்க முடியும் என அரசு புதிய செக் வைத்துள்ளது.

HIGHLIGHTS

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அடுத்தடுத்து செக்..! (Exclusive)
X

இதுவரை கட்டுப்பாடு இன்றி கொடி கட்டிப்பறந்த ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து அடுத்தடுத்து 'செக்' வைத்து வருகிறது. மத்திய அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் இனிமேல் ஒரு பிளாட் கூட விற்க கூடாது என தற்போது புதிய 'செக்' வைத்துள்ளது.

சினிமாத்துறையை விட அதிகளவு கருப்பு பணம், கள்ளப்பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் புழங்கி வந்தது. இது அப்பட்டமாக தெரிந்தாலும், இவர்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் கண்முன்னே கண்மாய்களும், வயல்களும், தோட்டங்களும் பிளாட்களாக மாறின. தமிழகத்தில் பல லட்சம் திடீர் பணக்காரர்கள் உருவாகினர். தவிர, அரசியல் பிரமுகர்கள் தாங்கள் அரசியலில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். இதுவரை கட்டுப்பாடு இல்லாமல் இத்தொழில் நடந்ததால், இத்துறையில் வணிகம் செய்த அத்தனை பேரும் அள்ளிக்குவித்தனர்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் ஸ்டாலின் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்த தனது கட்சியை சேர்ந்த மதுரை மூர்த்தியை இத்துறைக்கு அமைச்சராக்கினார். அப்போது, தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் இருந்தவர்கள் அத்தனை பேரும், 'அட நம்ம மூர்த்தியே இத்துறைக்கு அமைச்சராகி விட்டார். நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது' என கொண்டாடினர். ஆனால், மூர்த்தி அடுத்தடுத்து சாட்டையை சுழற்றியதும் ஒட்டுமொத்த தமிழகமும் ஆடிப்போனது. ஸ்டாலின் தனது அமைச்சர் மூர்த்திக்கு என்ன மாதிரி வழிகாட்டுதல்கள் வழங்கியிருந்தார் என்பது அவர் அடுத்தடுத்து மேற்கொண்ட அதிரடிகளுக்கு பின்னரே புரிந்தது.

தற்போதைய சூழலில் விதிகளை மீறி ஒரு சென்ட் நிலம் கூட விற்க முடியாது என்ற நிலையை மூர்த்தி உருவாக்கி விட்டார். பத்திரப்பதிவுத்துறையில் வாட்ச்மேன் முதல் அத்துறை இயக்குனர் வரை யாருக்கு என்ன அதிகாரம். யாரை சரி கட்டி என்ன செய்யலாம் என்பது மூர்த்திக்கு அத்துப்படியாக தெரியும். எனவே, அவர் முதலில் தனது துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சரி செய்தார். எனவே, துறை அதிகாரிகளும், ஊழியர்களும் விழித்துக் கொண்டனர். இதனால் பத்திரப்பதிவுத்துறையில் விதிமீறல்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனாலும் தற்போது உள்ள விதிகளில் பல ஆயிரம் ஓட்டைகள் உள்ளன. இதன் மூலம் தப்பி தொழில் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு தமிழக அரசு அடுத்த 'செக்' வைத்து விட்டது.

அதாவது மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை' தமிழகத்திலும் செயல்படுத்தி விட்டது. டி.டி.சி.பி., அப்ரூவல் வாங்குவதற்குள்ளேயே ரியல் எஸ்டேட் அதிபர்கள் திணறி விடுகின்றனர். அதற்கே அத்தனை விதிகளை கடக்க வேண்டும். இந்த புதிய சட்டங்களின்படி டி.டி.சி.பி., அப்ரூவல் வாங்கினாலும், 'ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் கேட்கும் பல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு கணக்கு எண் தருவார்கள். அந்த எண் மூலம் தான் இனி பிளாட்களை விற்க வேண்டும். பிளாட் போட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கவலையில்லை. இனிமேல் இந்த நம்பர் இல்லாமல் பதியவே முடியாது'. இப்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய பல ஆயிரம் ஃபைல்கள் காத்துக்கொண்டுள்ளன.

இந்த நம்பர் வாங்கி விட்டால், விற்பனை வரவு செலவுகளை வங்கி பரிவர்த்தனை மூலமே மேற்கொள்ள வேண்டும் என்பது அடுத்த சிக்கல். ஒவ்வொரு பிளாட் விற்பனையும் வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே நடை பெற வேண்டும். இதன் மூலம் பிளாட் வாங்கிய விலை, விற்பனை விலை உட்பட அத்தனை விவரங்களும் அரசுக்கு சென்று விடும். வாங்கியவர்கள், விற்றவர்கள் பற்றிய முழு விவரங்களும் அரசுக்கு சென்று விடும். இந்த கிடுக்குப்பிடி நடவடிக்கைகளால் கருப்பு பணத்தை பறிமாறிக் கொள்பவர்களும், முதலீடு செய்பவர்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். ஏதோ ஒரு வகையில் சம்பாதித்து விட்டு, ரியல் எஸ்டேட்டில் கிடைத்த லாபம் என சிலர் கணக்கு காட்டி வந்தனர். இது அத்தனைக்கும் தற்போது பெரும் சிக்கல் உருவாகி உள்ளது.

ஆனால், இத்துறையிலும் நேர்மையானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இது பற்றி கூறும் போது, 'ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பிளாட்கள் விற்றாலும், முறைகேடுகள் நடக்க பெருமளவில் வாய்ப்புகள் உள்ளது. இது அரசுக்கும், அமைச்சருக்கும் நன்கு தெரியும். இருப்பினும் மெல்ல, மெல்ல ஒழுங்குபடுத்தலாம் என்று அவர்கள் சற்று கவனத்துடன் செயல்படுகின்றனர். ஆனால் முன்பு போல் 10 ரூபாய்க்கு வாங்கினோம். நுாறு ரூபாய்க்கு விற்றோம் என்ற கதையெல்லாம் இனி நடக்காது. எதிர்காலத்தில் பிளாட்களின் விலையை அரசு கூட நிர்ணயிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். (தற்போது கனிம வளங்களுக்கு அரசு தானே விலை நிர்ணயிக்கிறது). அதேபோல் இத்துறையும் ஜி.எஸ்.டி.,க்குள் வரலாம். தி.மு.க., அரசு செல்லும் பாதை அப்படித்தான் தெரிகிறது. இது நாளையே நடக்கும் என கூற முடியாது. ஆனால் நிச்சயம் இனி நாளுக்கு நாள் கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் அதிகரிக்கவே செய்யும்' என்றனர்.

Updated On: 18 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்