/* */

வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றம் செய்வது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!

பெற்றவர்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை அவர்களுக்குப் பின்னர் வாரிசுகளின் பெயரில் மாற்றுவது எப்படி என்பதை தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

வாரிசுகள் பெயரில் பட்டா மாற்றம்  செய்வது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
X

பட்டா  பெயர் மாற்றம் (கோப்பு படம்)

Name changing of properties on the name of heirs

இன்றைய காலகட்டங்களில் வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் சம உரிமை பங்கு வழங்க வேண்டும் என அரசு அமைப்பு சட்டம் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் அனைவரது வீடுகளிலும் இப்பொழுது நிலம் சம்பந்தமான பல்வேறு வகையான பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கிறது இதற்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது.

ஆனால் இதற்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை. உங்களுடைய வாரிசுகளுக்கு உங்களுடைய சொத்துக்களை எப்படி நீங்கள் பத்திரப் பதிவு செய்ய முடியும். நிலம் சம்பந்தமான பல்வேறு விதமான தகவல்களுக்கு இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்வது எப்படி?

முதலில் தந்தை அல்லது தாய் உயிரிழந்து விட்டால் அவர்களின் பெயரில் இருக்கும் பட்டாவை. வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி என்பதையும், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது பற்றியும் பார்ப்போம் வாங்க.

தந்தை அல்லது தாய் உயிரிழந்து விட்டால் அவர்களில் பெயரில் இருக்கும் பட்டாவை வாரிசு சான்று வைத்து வாரிசுகளின் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதேபோல தந்தை அல்லது தாய் உயிரிழந்து விட்டால் அவர்களின் பெயரில் உள்ள பட்டாவை வைத்து பாகப்பிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் அவர்களின் பெயரில் தனித்தனியாக பட்டா மாற்றிக் கொள்ளலாம்.

அதாவது வாரிசுகள் இரண்டு நபர்களுக்கு மேல் இருந்தால் அவர்கள் தனித்தனி பட்டாவாக மாற்றிக்கொள்ள அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது.

இதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன?

1. ஒரு குடும்பத்தில் இருக்கும் தந்தை உயிரிழந்து விட்டால் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை பட்டா மாற்றம் செய்வதற்கு தந்தையின் பெயரில் உள்ள பட்டா.

2. தந்தையின் இறப்புச் சான்று வாரிசு சான்று மற்றும் தந்தையும் தாயும் இல்லை என்றால் அவர்களின் இறப்புச் சான்று போன்ற முக்கியமான ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

3. அதேபோல வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சென்று அதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால்.

4. இதன் பிறகு இதற்கான பட்டம் மாறுதல்கள் பணி நடைபெறும் குறிப்பாக உங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் இதற்கான அனைத்து வேலைகளும் எளிமையாக நடைபெறுவதற்கு வழிவகை இருக்கிறது.

அதற்கு நீங்கள் சில முக்கியமான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Updated On: 14 Sep 2023 6:04 AM GMT

Related News