/* */

விளையாட்டு வினையானது: நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

திருச்செங்கோடு அருகே விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விளையாட்டு வினையானது: நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது
X

பைல் படம்

திருச்செங்கோடு அருகே பருத்திப்பள்ளி நாடார் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (27). லாரி பட்டறை தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிவாம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியை சேர்ந்தவர் கோபி (23) என்பவர் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். உமாசங்கரும், கோபியும் நண்பர்கள்.

இந்த நிலையில் நண்பர்கள் 2 பேரின் குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது உமாசங்கர், கோபி ஆகிய 2 பேரும் கோவில் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்து விளையாடியதாக தெரிகிறது.

இவ்வாறு விளையாடி கொண்டிருந்தபோது உமாசங்கருக்கும், கோபிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, நண்பர் என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாசங்கரை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாசங்கர் உயிரிழந்தார்.

இது குறித்து, உமாசங்கரின் மனைவி கொடுத்து புகாரின் பேரில், எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பரை கத்தியால் குத்திக் கொன்றதாக கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!