/* */

சேந்தமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, பாஜக கூட்டத்தில் தீர்மானம்

namakkal news, namakkal news today-சேந்தமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்று பாஜக பட்டியல் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

சேந்தமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகம் அமைக்க, பாஜக கூட்டத்தில் தீர்மானம்
X

namakkal news, namakkal news today- சேந்தமங்கலத்தில் நடைபெற்ற பாஜக பட்டியல் அணி கூட்டத்தில், மாநில பாஜ துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசினார். அருகில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி.

namakkal news, namakkal news today- நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு கூட்டம், முத்துகாப்பட்டியில் நடைபெற்றது.

பட்டியில் அணி மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாநில பாஜக துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது,

கடந்த 8 ஆண்டுகளில், பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்க, அனைவரும் அயராது பாடுபட வேண்டும், என்றார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்திய மூர்த்தி, பட்டியல் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் தலித் பாண்டியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், வர்த்தகள் பிரிவு மாநில செயலாளர் அகிலன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

முத்துகாபட்டி அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சேந்தமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அ.வாழவந்தி கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப்பட்டது. அந்த வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த வீடுகளை சீரமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், இளங்கோவன், சுரேஷ் கண்ணா, சக்திவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில், ஜெயகுமார் நன்றி கூறினார்.

Updated On: 29 March 2023 2:45 AM GMT

Related News