/* */

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிப்பை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியல்

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிக்க்கப்பட்டதை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிப்பை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட கிருஸ்துவர்கள்.

சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் எஸ்.பி.எம். தேவாலயம் உள்ளது. அதன் பின்னால் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு கடந்த மாதம் அங்கிருந்த சில கல்லறைகள் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த எஸ்.பி.எம். திருச்சபை நிர்வாகத்தினர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று எஸ்.பி.எம். தேவாலயம் முன்பு கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு சேந்தமங்கலம்-நாமக்கல் செல்லும் மெயின் ரோட்டில், திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த, சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள், கிறிஸ்தவ மதபோதகர் அருண் பிலிப், நிர்வாகி கமலேஷ், சிறுபான்மை நல உரிமைகள் பிரிவு அமைப்பாளர் சாம்சம்பத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்லறைகள் இடித்தது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பிரச்சினையை சமூக தீர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 13 Jun 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...