/* */

நகைக்கடன் வழங்க கோரி வங்கி முற்றுகை

சேந்தமங்கலத்தில் நகை கடன் வழங்க கோரி வங்கியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்

HIGHLIGHTS

நகைக்கடன் வழங்க கோரி வங்கி முற்றுகை
X

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த இராமநாதபுரம் புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நகை கடன் மற்றும் பயிர்கடன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்கியில் நகை கடனோ, பயிர் கடனோ வழங்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்களும், விவசாயிகளும் நகை கடன் வழங்காததை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் போலீசாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இன்று 5 நபருக்கும் திங்கட் கிழமை மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக நகை கடன் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 22 Jan 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  3. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  4. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  5. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  6. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  7. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  8. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  9. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  10. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...