ராசிபுரம் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, லைசென்ஸ் இல்லாமல், கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராசிபுரம் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, ஆர்.புதுப்பட்டி பகுதியில், மதுவிலக்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, நாமகிரிப்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

பிடிபட்ட நபரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ விஜயராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஆர்.புதுப்பட்டி பொன்னுவேல் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி திருப்பதி (52) என்பதும், அவர் வைத்திருந்தது லைசென்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர், ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 28 Jun 2021 9:29 AM GMT

Related News