ரூ.1கோடியில் திட்டப் பணிகள்: அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மதிவேந்தன்

ராசிபுரம் பகுதியில் ரூ.1கோடியில் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரூ.1கோடியில் திட்டப் பணிகள்: அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மதிவேந்தன்
X

பிள்ளாநல்லூர் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள, புதிய குடிநீர் தொட்டியை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தின் திறந்து வைத்தார்.

ராசிபுரம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்காளிப்பட்டி, சிங்களாந்தபுரம், பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய திட்டங்களை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் பேசினார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ராசிபுரம் எம்எல்ஏ தொகு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளும் கட்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7வது வார்டில், 1.075 கி.மீ நீளத்திற்கு ரூ.65 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் பார்லிமெண்ட் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர் பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 March 2023 12:28 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...