இறந்த நாய்க்கு பிளக்ஸ் பேனர் வைத்த மக்கள்

ராசிபுரத்தில் இறந்த தெரு நாய்க்கு பிளக்ஸ் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இறந்த நாய்க்கு பிளக்ஸ் பேனர் வைத்த மக்கள்
X

ராசிபுரத்தில் இறந்த தெருநாய்க்கு பிளக்ஸ் போர்டு வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உள்ள பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோவில் அருகில் 'விக்கி' என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் சுற்றி திரிந்தது. விக்கி அப்பகுதிமக்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தது. இரவில் சந்தேகப்படும் வகையில் வரும் நபர்களை தெருவில் அனுமதிக்க விடாமல் கூச்சலிடுமாம். இதனால் திருடர் பயமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி இளைஞர்கள், விக்கியை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விக்கி இறந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். தங்களது பகுதிக்கு காவலானாக இருந்த விக்கி இறந்த சோகத்தை தாள முடியாத அப்பகுதியினர் விக்கிக்கு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 10 April 2021 11:26 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
 2. திருநெல்வேலி
  நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு...
 3. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
 4. இந்தியா
  அடுத்த முப்படை தலைமைத்தளபதி யார்? நரவனே நியமிக்கப்பட வாய்ப்பு
 5. சிவகங்கை
  பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு...
 6. கள்ளக்குறிச்சி
  உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...
 7. தர்மபுரி
  தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...
 8. மன்னார்குடி
  மன்னார்குடியில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை திருட்டு
 9. தேனி
  தேனியில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
 10. வாணியம்பாடி
  பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்