இராசிபுரம் அருகே பைக் மோதி, தீப்பிடித்து எரிந்த லாரி: வாலிபர் பலி

இராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், மோட்டார் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், லாரிதீப்பிடித்து எரிந்தது. மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராசிபுரம் அருகே பைக் மோதி, தீப்பிடித்து எரிந்த லாரி: வாலிபர் பலி
X

இராசிபுரம் அருகே பைக் மீது மோதிய லாரி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் இருந்து சணல் கயிறு பாரம் ஏற்றிய லாரி சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் காளிமுதல் (32) என்பவர் ஓட்டி சென்றார்.

நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் ஆண்டகளூர் கேட் மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் லாரியின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி வாலிபருடன் சேர்த்து சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச்சென்றது. உரசலில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்கில் தீப்பிடித்து லாரிக்கும் தீ பரிவியது. கயிறு லோடு ஏற்றியிருந்ததால் தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது.

தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். மோட்டார் சைக்கிளுடன் சேர்ந்து எரிந்த நிலையில் பைக்கை ஓட்டிவந்த இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் மல்லப்பள்ளியைச் சேர்ந்த சிலம்பரசன் (21) என்பதும், அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்ததாகவும், ஆடிப்பண்டிகைக்காக மோட்டார் பைக்கிள் ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2021-07-18T11:20:11+05:30

Related News

Latest News

 1. கள்ளக்குறிச்சி
  உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...
 2. மன்னார்குடி
  மன்னார்குடியில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை திருட்டு
 3. தேனி
  தேனியில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
 4. வாணியம்பாடி
  பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் தாலுகாவில் 31 பேருக்கு கொரோனா இறப்பு நிவாரண நிதி வழங்கல்
 6. தேனி
  தென்காசியில் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம்
 7. தென்காசி
  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதிக்கு தென்காசியில் மவுன...
 8. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
 9. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத்திற்கு பாஜகவினர் அஞ்சலி
 10. ஈரோடு
  ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு