/* */

நம்ம நாமக்கல், பசுமை நாமக்கல் திட்டம்: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைப்பு

இராசிபுரம் அருகே நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தின் துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருக்கபுரம் பஞ்சாயத்தில், நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், ஒரே நாளில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க விழா மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி., சின்ராஜ் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருந்தாலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையை மாற்ற தமிழக முதல்வரின் பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டம் பயன்படும். மழைப்பொழிவை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தால் நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்காக கடந்த 10 நாட்களாக மரக்கன்றுகள் நட தகுந்த ஆழம் மற்றும் அகலம் உள்ள குழிகள் தோண்டப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 4 அடிக்கும் மேல் உயரமுள்ள மரங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு நடப்படுவதால், ஒரு வருட பராமாரிப்பிற்கு பின் மரங்கள் தாங்களாவே வளரும் நிலையை அடையும் என்றார்.

இம்மரம் நடும் நிகழ்ச்சியில் பூவரசன் -24,640, வேம்பு - 34,800, புங்கன் - 27,980 புளி - 9,750, கொண்றை - 2,390, தாரகை -1,940, வன்னி -400, நாவல் -1,500, அரசன் -1,800, தேக்கு - 1,625, வாகை -1,300, பலா - 200, தென்னை - 1200, முந்திடணீ - 1,200, மா - 1,800, சப்போட்டா -1,500, சில்வர் ஓக் -1,725 பாலை - 100, ஆலமரம் -150 உட்பட மொத்தம் 1.16 இலட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் நடவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Sep 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  4. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  6. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  7. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  9. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  10. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு