இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்

இராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் விஜய் (19). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ளார்.

இவரும், அவரது நண்பர்கள் கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (22), புதுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா (19) ஆகியோரும் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஆனந்தராஜ் மற்றும் சூர்யாவுக்கும் விளையாடிய விதத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் புதுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்தராஜ் மற்றும் சூர்யா இருவரும் விஜய்யை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த விஜய் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விஜய்யை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Updated On: 26 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

 1. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
 2. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 3. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
 4. தேனி
  போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
 5. திருநெல்வேலி
  நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு...
 6. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
 7. இந்தியா
  அடுத்த முப்படை தலைமைத்தளபதி யார்? நரவனே நியமிக்கப்பட வாய்ப்பு
 8. ஈரோடு
  ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
 9. சிவகங்கை
  பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு...
 10. கள்ளக்குறிச்சி
  உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...