/* */

செய்தித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் பேச்சு: ராசிபுரத்தில் நேரலை

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உருவப்படத்திற்கு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

செய்தித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் பேச்சு: ராசிபுரத்தில் நேரலை
X

டிஜிட்டல் வீடியோ வாகனத்தின் மூலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பார்வைக்காக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது

தமிழக சட்டசபையில், செய்தித்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய நிகழ்வு, ராசிபுரத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன டிஜிட்டல் வீடியோ வாகனம் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், நவீன டிஜிட்டல் வீடியோ வாகனம் மூலம் ராசிபுரத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டின், பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது துறை ரீதியாக மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கை அறிவிப்புகள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, சட்டசபையில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் எம்எல்ஏக்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்துப் பேசி, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் செய்தித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் பேசி நிகழ்வு, நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு மூலம், அதிநவீன டிஜிட்டல் வீடியோ வாகனத்தின் மூலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையம் அரகில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் டிவிட்டர், வாட்ஸ்அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக செய்தி துறையின் மானிய கோரிக்கையை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் பெரியோர், தலைவர்களின் சிலைகள், திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவில்லத்தில் வைக்கப்பட்டுள்ள, அவரது திருவுருவப்படத்திற்கு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், ஜேடர்பாளையம் காவிரிக் கரையில் அமைந்துள்ள காவேரி ஆற்றில் ராஜவாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயக்கர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 11 April 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...