போதமலை மலைப்பாதைக்கான நில அளவீடு பணிகளை அமைச்சர் துவக்கி வைப்பு

போதமலை மலைப்பாதைக்கான நில அளவீடு பணிகளை அமைச்சர் துவக்கி மதிவேந்தன் வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போதமலை மலைப்பாதைக்கான நில அளவீடு பணிகளை அமைச்சர் துவக்கி வைப்பு
X
போதமலைக்கு பாதை அமைப்பதற்கான நில அளவீடு பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இந்த மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு, இதுவரை ரோடு வசதி இல்லை. வனப்பகுதியில் ரோடு அமைக்க வேண்டியுள்ளதால், சுப்ரீம் கோர்ட்டின் பசுமை தீர்ப்பாயம் அனுமதி பெற முடியாமல் பல ஆண்டுகளாக பாதை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததால், தற்போது போதமலைக்கு 34 கி.மீ தூரம் மலைப்பாதை அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மலைப்பாதை அமைக்கும் பணிகளுக்கு முன்னேற்பாடாக, போதமலை அடிவாரமான கீழூர் பஞ்சாயத்து, புதுப்பட்டி ஆகிய இடங்களில் மலைப்பாதை அமைக்க, நில அளவீடு பணிகள் மற்றும் எல்லைகளை குறிப்பிட்டு அடையாள கற்கள் நடும் பணி நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் .துரைசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் துரைசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் புதுப்பட்டி ஜெயக்குமார், பட்டணம் நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, கீழூர் பஞ்சாயத்து தலைவர் அலமேலுமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 2. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 3. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 4. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
 7. ஈரோடு
  அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
 8. தமிழ்நாடு
  திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
 9. குமாரபாளையம்
  அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
 10. குமாரபாளையம்
  பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன்...