/* */

ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம்  காய்ச்சியவர் கைது
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில், நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில், 30 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறலைக் கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (51) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (47). சுண்ணாம்பு சூளை நடத்தி வருகிறார். இவருடைய சுண்ணாம்பு சூளை அருகே உள்ள கொட்டகையில் 35 லிட்டர் கொண்ட மண்பானையில் சாராய ஊறல் போட்டுள்ளதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உடனடியாக அங்கு சென்ற போலீசார் சாராய ஊறல் இருந்த பானையை அழித்தனர். இதையடுத்து சாராய ஊறல் போட்டதாக பொன்னுசாமியை கைது செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Updated On: 27 Jun 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  4. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  5. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  6. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  7. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  8. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  9. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?