ராசிபுரம் அருகே 12 வயது பள்ளி மாணவி தற்கொலை

ராசிபுரம் அருகே 12 வயது பள்ளி மாணவி உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராசிபுரம் அருகே 12 வயது பள்ளி மாணவி தற்கொலை
X

சேலத்தைச் சேர்ந்தவர் காதர்பீ. இவரது மகள் சுமையா (12) 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக காதர்பீ கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தன் மகளுடன் ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டியில் தங்கை பானு வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுமையா உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுமையா ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சுமையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2021 4:45 AM GMT

Related News