இந்து கோயில் நகைகளை உருக்கும் முயற்சி: முன்னாள் எம்.பி., கண்டனம்

இந்து கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க கூடாது என முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்து கோயில் நகைகளை உருக்கும் முயற்சி: முன்னாள் எம்.பி., கண்டனம்
X

இராசிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட பாஜ இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் முன்னாள் எம்.பி., டாக்டர் ராமலிங்கம் பேசினார்.

நாமக்கல் மாவட்ட பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட பாஜ தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி, இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான டாக்டர் கே.பி.ராமலிங்கம், தமிழகத்தில் உள்ள இந்த கோயில்களுக்கு, பக்தர்கள் ஏராளமான தங்க நகைகளை கானிக்கையாக வழங்கியுள்ளனர். இந்த நகைகளை தமிழக அரசு உருக்கி வேறு வகையில் பயன்படுத்த முடிவு முயற்சி செய்கிறது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் வரலாற்றையும், ஆலயங்களின் வரலாற்றையும், எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் வகையில் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நகைகள் இன்றும் வரலாற்றுப் பெட்டகங்களாக உள்ளன. அதில் அக்கால மன்னர்கள் கால நகைகள், முதல் இன்றைய தங்க, வைர நகைகள் வரை உள்ளன. இவை தமிழகத்தின் பாரம்பரிய கலை பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன.

எனவே, இந்து மதத்தின் இருப்பிடமாகக் கருதப்படும் தமிழகத்தில், மதச்சார்பற்ற நிலையை மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டும். இந்து மத கலாச்சாரப் பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படும் கோயில் நகைகளை உருக்க முயற்சி செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறினார்.

திரளான இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Sep 2021 2:15 AM GMT

Related News