முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, ராசிபுரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்காத தமிழக அரசைக் கண்டித்து ராசிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அர்பன் பேங்க் துணைத் தலைவர் வெங்கடாசலம்,கோபால், நகர இளைஞரணி செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், பட்டு சொசைட்டி துணைத் தலைவர் கந்தசாமி, ஐடி விங் செயலாளர் ஹரிராகவேந்திரன், கண்ணையா செல்வம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 7 Dec 2021 3:15 AM GMT

Related News