/* */

நாமக்கல் அருகே குவாரி பிரச்சினையால் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு

நாமக்கல் அருகே குவாரி பிரச்சினையால் கிராமசபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே குவாரி பிரச்சினையால் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு
X

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடந்தை பஞ்சாயத்தில், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இரண்டாவது முறையாக கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கனித்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடந்தை கிராம பஞ்சாயத்தில், 9 வார்டுகள் உள்ளன. இங்கு வசந்தா முருகேசன் என்ற பெண் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த பஞ்சாயத்தில், 4 மற்றும் 5 வது வார்டுக்கு உட்பட்ட பெரிய சூரம்பாளையம், சின்ன சூரம்பாளையம், கொளத்திப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 10 க்கும் மேற்பட்ட தனியார் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இரவு பகலாக பலத்த வெடி வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால், பெரும் சத்தம் மற்றும் புகை கிளம்புகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் பறவை இனங்கள் பாதிக்கப்படுகின்றன. பல நேரிங்களில் பாறைகளின் துகள் வீடுகளின் மேல் விழுகின்றன. இரவு நேரத்தில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்களில் கட்டிடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தின் அடியில் ஏற்படும் அதிர்வின் காரனமாக, பல விவசாய போர்வெல்கள் மூடப்பட்டுவிட்டன. குவாரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு கனரக லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் ரோடுகள் பாதிக்கப்படுகின்றன. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், குவாரி சம்மந்தமான பிரச்சினைகள் எழுப்பப் பட்டதால் கிராம சபைக் கூட்டம் நிறுத்தப்பட்டது. கடந்த ஆக. 15ஆம் தேதி கூட்டத்தில் புறக்கணிப்பு செய்த போது அடுத்த முறை குவாரிகள் மீது விதிமீறல் குறித்து ஆய்வினை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு மக்கள் கலைந்து சென்றனர். கடந்த 2ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு நடந்தை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் கல் குவாரிகளை கட்டுப்படுத்த, எவ்விதமான முயற்சியும் எடுக்காத காரணத்தினாலும், கனிமவளத்துறை மாவட்ட உதவி இயக்குனர் பூர்ணவேல் அளித்த பதிலில் திருப்தி இல்லாததாலும், கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள் சமரசம் செய்ய முயற்சித்த போதும் மக்கள் பெதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து திரும்பிச்சென்றுவிட்டனர்.

Updated On: 3 Oct 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்