/* */

பரமத்தி வேலூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரும்புக்கடைக்கு 'சீல்'

பரமத்திவேலூரில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரும்பு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

பரமத்தி வேலூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட  இரும்புக்கடைக்கு  சீல்
X

பரமத்திவேலூர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரும்பு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பால், மருத்துவம், மளிகைக்கடைகள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மட்டும், காலை 6 மணி முதல், மதியம் 1 மணி வரை திறக்கலாம் என்று, கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பரமத்தி வேலூர், பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள இரும்புக்கம்பிகள் மொத்த விற்பனை கடை, ஊரடங்கு விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையொட்டி ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வேலூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் அங்கு சென்றனர்.

விதிமீறல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகை மீறி செயல்படும் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Updated On: 10 Jun 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!