/* */

மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவங்கியது. சுமார் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
X

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு 2021- 22 அரவை பருவத்திற்கான கரும்பு அரவை துவக்க விழா ஆலை வளாகத்தில் நடை பெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரேயா பிசிங் தலைமை வகித்தார்.

ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்.பி. சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மல்லிகா வரவேற்றார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் முதல் கரும்பை போட்டு அரவையை துவக்கி வைத்துப் பேசுகையில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடும் பகுதிகளிலிருந்து 4 ஆயிரத்து 75 ஏக்கர் நடவு மற்றும் மறுதாம்பு கரும்பு ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு கொள்முதல் செய்து அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

பின்னர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நவலடி பேசுகையில், சர்க்கரை ஆலை வளாகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ரூ. 90 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இணை மின் உற்பத்தித் திட்டம், தற்போது ரூ. 60 கோடி செலவில் பணிகள் நடைபெற்று முடிவுறாத நிலையில் கிடப்பில் உள்ளது. இதனை விரைந்து முடித்து மின் உற்பத்தியை துவங்க வேண்டும்.

சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கான கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வேளாண் துறையின் மூலம் வழங்கி வந்த நிலையில் இனிவரும் காலங்களில் ஆலை நிர்வாகமே வழங்க மாநில அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். விழாவில் சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கரும்பு விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு