நாமக்கல் அருகே கோஷ்டி மோதலில் இளைஞர் கொலை
நாமக்கல் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் டூ வீலர் மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார்.
HIGHLIGHTS

பைல் படம்.
நாமக்கல், சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னதம்பி, இவரது மகன் பிரபாகரன் (29) கார் டிரைவர். அவருக்கும், மேதர்மாதேவியை சேர்ந்த டூ வீலர் மெக்கானிக் விக்னேஷ் (24) என்பவருக்கும் இடையே, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு, செல்லப்பா காலனி மாதா கோயில் பின் புறம் பிரபாகரனுக்கும், விக்னேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஓவர் தாக்கிக்கொண்டனர். அப்போது, ஆத்திரம் அடைந்த பிரபாகரன், விக்னேஷை கத்தியால் குத்தியுள்ளார். தகவல் அறிந்த அங்கு வந்த விக்னேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து தனது நண்பரை குத்தியதால் ஆவேசம் அடைந்த விக்னேஷின் நண்பர்கள், பிரபாகரனை தேடிப்பிடித்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த நாமக்கல் எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி, டி.எஸ்.பி சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேதர்மாதேவி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.