புதுச்சத்திரம் அருகே கந்துவட்டி வசூலித்த பெண் கைது

Case Status By Police Station -புதுச்சத்திரம் அருகே கந்துவட்டி வசூலித்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுச்சத்திரம் அருகே கந்துவட்டி வசூலித்த பெண் கைது
X

பைல் படம்.

Case Status By Police Station -நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்தவர் தங்கராஜ் (32). அவர் தற்போது ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூரில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (39) என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டை அடமானமாக வைத்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதற்காக வேலகவுண்டம்பட்டி பதிவு அலுவலகத்தில் அடமானப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். கடன் தொகைக்கு 24 சதவீதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். பின்னர் அவ்வப்போது வெங்கடாஜலத்திடம், தங்கராஜ் ஆவணம் ஏதுமின்றி மேலும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் வெங்கடாஜலமும், அவரது தாய் சகுந்தலாமணி (70) ஆகியோர் தங்கராஜின் வீட்டிற்கு சென்று ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் அல்லது வீட்டை கிரையம் எழுதி தர வேண்டும் என மிரட்டியதாக, தங்கராஜ் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதற்காக, இதுவரை ரூ.7 லட்சம் வரை வட்டி செலுத்திவிட்டதாகவும், தற்போது வெங்கடாஜலம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும் தங்கராஜ் புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது சம்மந்தமாக சகுந்தலாமணியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பத்திரங்களை கைப்பற்றினர். வெங்கடாஜலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-24T16:37:44+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்