/* */

கள்ளத்தனமாக மது விற்பனை குறித்து புகார் செய்ய வாட்ஸ்ஆப் நம்பர் வெளியீடு

Namakkal Collector Whatsapp Number-நாமக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை குறித்து புகார் செய்ய வாட்ஸ்ஆப் நம்பர் வெளியீடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கள்ளத்தனமாக மது விற்பனை குறித்து புகார் செய்ய வாட்ஸ்ஆப் நம்பர் வெளியீடு
X

நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர்  உமா.

Namakkal Collector Whatsapp Number-கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்தாலும், அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் 88383 52334 என்ற செல்போன் நம்பருக்கு வாட்ஸ்ஆப் மூலம் புகார் செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, காவல் துறை, வருவாய்த் துறை, டாஸ்மாக், கலால்துறை, சுகாதாரத்துறை அலுவலர்களைக் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியர் உமா பேசுகையில்,

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தணிக்கையின்போது அனுமதியற்ற பார்கள் நடைபெறுவதை கண்டறியவும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்டறியவும், கள்ளசாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், சாலையோர கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் எக்சைஸ் லேபிள் மற்றும் பில்கள் உடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கொக்கராயன்பேட்டை, கரிச்சிப்பாளையம், நாமக்கல் (2 கடைகள்), பவுத்திரம், நாமகிரிப்பேட்டை, மொளசி மற்றும் நெ.3. குமாரபாளையம் ஆகிய கடை பணியாளர்களிடம் டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி ரூ.70,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலை வைத்து விற்பனை செய்த டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆனந்தன், சுரேஷ்குமார் ஆகியோர் வேறு கடைகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக வலைதலங்களில் கடைகளை பற்றி புகார் வரப்பெற்றதைத் தொடர்ந்து மொளசி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மாணிக்கம் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாரில் காலை நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்ததை கண்டறிந்து, அதனை கண்காணிக்கத் தவறிய மேற்பார்வையாளர் வெங்கடாசலம் என்பவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

கடையின் வேலை நேரமான பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபான கடைகள் மற்றும் பார்கள் இயங்குகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மதுபான கடைக்கு அருகில் செயல்பட்ட 36 அனுமதியற்ற பார்கள், 18 பெட்டிக்கடைகள் மற்றும் தள்ளு வண்டிகள் போன்றவை கண்டறிப்பட்டு, பூட்டி சீலிடப்பட்டுள்ளது. கள்ளத்தனமாக மதுவகைகள் விற்பனை செய்த 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் 88383 52334 என்ற செல்போன் எண்ணிற்கு நேரடியாகவும், வாட்சப் மூலமாகவும் பொதமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் இதுவரை 11 புகார்கள் பெற்றப்பட்டு 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என

கூட்டத்தில் கூடுதல் காவல் உதவி ஆய்வாளர் ராஜூ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 6:47 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...