பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு

பெங்களூருவில் இருந்து விவிபேட் எந்திரங்கள் நாமக்கல்லுக்கு வந்துள்ளன. மாவட்ட கலெக்டர் உமா இதனை ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு
X

பெங்களூருவில் இருந்து வந்த விவிபேட் எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா சரிபார்த்து ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, பெங்களூருவில் உள்ள, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து, மொத்தம் 1,000 எண்ணிக்கையில், 3 வகையிலான வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகருவிகள் (விவிபேட்) மற்றும் 1000 எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

இந்த இயந்திரங்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எலகட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட உள்ளன. இதையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா விவிபேட் இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, புதிய இயங்திரங்கள் அதனுள் வைக்கப்பட்டு அறைக்கு சீலிடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தான் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது அந்த மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து விவிபேட் இயந்திரங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவிபேட் இயந்திரங்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இந்த அறையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jun 2023 9:33 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  2. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  3. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  4. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
  6. கோவில்பட்டி
    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...
  7. காஞ்சிபுரம்
    திமுக மருத்துவஅணி சார்பில் 1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்...
  8. தஞ்சாவூர்
    இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் திருடிய மர்ம நபர்கள்
  10. தூத்துக்குடி
    கூட்டுறவு வங்கி காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி மோசடி: 3 பேர் கைது