/* */

கிராம சபைக் கூட்டம் மீண்டும் நடத்தக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

கோக்கலையில் ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்தை மீண்டும் நடத்தக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

கிராம சபைக் கூட்டம் மீண்டும் நடத்தக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
X

ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்தை மீண்டும் நடத்தக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த கோக்கலை கிராம பொதுமக்கள்.

இதுகுறித்து திருச்செங்கோடு தாலுகா, கோக்கலை கிராம பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், கோக்கலை கிராமத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் குடிநீர், குடியிருப்புகள், சாலைகள் சேதாரம், காற்று மாசு படுதல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே இப்பகுதி மக்களின் சார்பாக கடந்த ஜனவரி 2020ம் ஆண்டு 26ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பொதுமக்களின் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு சார்பில் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் தடை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது வரை அமல்படுத்தாமல் இருக்கிறது. இதுகுறித்து கடந்த காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றக் கூட்டத்தில் இப்பிரச்சனை குறித்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் மூலம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் எங்கள் கிராமத்திற்கு கலெக்டர் நேரில் வருகை தந்து அவரது முன்னிலையில் கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 18 Oct 2021 10:45 AM GMT

Related News