/* */

காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Teacher Job Vacancy- நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை  ஆசிரியர் தற்காலிக பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்.

Teacher Job Vacancy- நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2022–23ம் கல்வி ஆண்டில், கடந்த ஜூன் 1 நிலவரப்படி, காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதியான விண்ணப்பதாரர்கள், எழுத்து மூலமான விண்ணப்பங்களை, நேரடியாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ, உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன், தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது சார்பான காலிப்பணியிட விபரங்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில், வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிட விபரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 9:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்