/* */

நாமக்கல், குமாரபாளையம் உள்பட 5 நகராட்சியில் வார்டு இடஒதுக்கீடு விபரம்

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், குமாரபாளையம் உள்ளிட்ட 5 நகராட்சிகளில் வார்டு வாரியாக தேர்தல் இட ஒதுக்கீடு விபரம் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல், குமாரபாளையம் உள்பட 5 நகராட்சியில் வார்டு இடஒதுக்கீடு விபரம்
X

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில், வார்டுகள் வாரியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு தேர்தல் கமிஷன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு விபரம்:

நாமக்கல் நகராட்சி: மொத்தம் உள்ள 39 வார்டுகளில், வார்டு எண்கள் 1, 2, 4, 13, 17, 18, 24, 25, 26, 27, 29, 31, 32, 33, 35, 37 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 15, 30, 39, எஸ்.சி. (பொது) பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7, 8, 14, 28 ஆகியவை எஸ்.சி.(பெண்கள்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 3, 5, 6, 9, 10, 11, 12, 16, 19, 20, 21, 22, 23, 34, 36, 38 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் நகராட்சி: மொத்தம் உள்ள 33 வார்டுகளில், 1ஆவது வார்டு எஸ்.சி. (பொது), 2, 4, 5, 9, 10, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 27, 28 பெண்கள் (பொது) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர 3, 6, 7, 8, 11, 12, 15, 22, 24, 25, 26, 29, 30, 31, 32, 33 ஆகியவை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ராசிபுரம் நகராட்சி: மொத்தம் உள்ள 27 வார்டுகளில், எண் 1 மற்றும் 20 ஆவது வார்டுகள் எஸ்.சி. (பெண்கள்), 4 வது வார்டு எஸ்.சி (பொது), 3, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 21, 22, 25 ஆகியவை பெண்கள் (பொது) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 2, 5, 6, 7, 8, 9, 14, 19, 23, 24, 26, 27 ஆகிய வார்டுகள் பெது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு நகராட்சி: மொத்தம் உள்ள 33 வார்டுகளில், 31, 33ஆவது வார்டுகள் எஸ்.சி. (பொது), 3, 13 எஸ்.சி (பெண்கள்), 6, 7, 11, 15, 16, 17, 19, 20, 21, 23, 24, 25, 26, 29, 30 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) பிரிவுக்கும், 1, 2, 4, 5, 8, 9, 10, 12, 14, 18, 22, 27, 28, 32 ஆகியவை பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பள்ளிபாளையம் நகராட்சி: மொத்தம் உள்ள 21 வார்டுகளில், எண் 11 எஸ்.சி (பெண்கள்), 1, 2, 5, 10, 13, 14, 15, 16, 17, 19 ஆகியவை பெண்கள் (பொது) பிரிவுக்கும், 3, 4, 6, 7, 8, 9, 12, 18, 20, 21 ஆகியவை பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 47,373 ஆண் வாக்காளர்கள், 51,590 பெண் வாக்காளர்கள், 37 மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் 99 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல் நகராட்சி தலைமை தேர்தல் நடத்தும் அலுவலராக, நகராட்சி கமிஷனர் சுதா, உதவி தேர்தல் அலுவலர்களாக 1-10 ஆவது வார்டு வரை நகராட்சிப் பொறியாளர் சுகுமார், 11-20 ஆவது வார்டு வரை மேலாளர் சிவகுருநாதன், 22-30 வார்டு வரையில் நகராட்சி அலுவலர் ரவீந்திரன், 31-39 வார்டுகள் வரையில் துணை தாசில்தார் நிலையிலான அலுவலர் செங்கோட்டுவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 21 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  2. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  3. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  4. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  5. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  6. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  7. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  8. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  9. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  10. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?