/* */

சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் அருகே கீரம்பூர் சுங்கச்சாவடி முன்பு திரளான லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் உயர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல் அருகே, கீரம்பூர் சுங்கச்சாவடி முன்பு திரளான லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான அளவில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், சுங்க கட்டணத்தை, தனியார் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 60 இடங்களில் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், இதில் 30 சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 1ம் தேதியும், 30 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும், சுமார் 15 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்க்கட்டண உயர்வைக் கைவிடக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, கடந்த, மார்ச் 20ம் தேதி, நாமக்கல்லில் நடந்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதையொட்டி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூர் அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் சின்னுசாமி, பொருளாளர் தாமோதரன், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், நாமக்கல் ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழக பொது செயலாளர் பாலசுப்ரமணியம், நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி, விடுதலைக்களம் அமைப்பின் நிறுவனர் நாகராஜன் உள்ளிட்ட திரளான லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, நெடுஞ்சலை சுங்கக்கட்டணம் உயர்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

Updated On: 1 April 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு