/* */

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் மழை வெள்ளம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 13ம் தேதி வரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தப்படும்.

HIGHLIGHTS

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் பயிற்சி முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம், அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் மழை வெள்ளம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 13ம் தேதி வரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தப்படும்.

தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மூலம் நாமக்கல் மாவட்ட மீட்பு பணி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வரும்போதும், பருவமழை காலங்களிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதையொட்டி தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மழை காலங்களில், வெள்ள அபாயம் ஏற்படும்போது எப்படி சமாளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கம் வழங்கப்படும்.

வரும் 13ம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி, குமாரபாளையம் தாலுக்கா பகுதிகளில், காவிரி கரையோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ஒத்திகை பயிற்சி எந்த வகை பேரிடர்களையும் எதிர்கொள்ளவும், சமாளிப்பதற்காகவும் அளிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியினை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, மாவட்ட ஆட்சியரின் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கலையரசு உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Oct 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்