/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று நவ. 25ம் தேதி வெள்ளிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 36 முதல் 44, தக்காளி ரூ. 14 முதல் 16, வெண்டைக்காய் ரூ. 20 முதல் 25, அவரை ரூ. 60 முதல் 70, கொத்தவரை ரூ. 36, முருங்கைக்காய் ரூ. 70, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 40, பாகல் ரூ. 50 முதல் 60, பீர்க்கன் ரூ. 40 முதல் 50, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12, மாங்காய் ரூ. 60, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 70, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 45, பெ.வெங்காயம் ரூ. 25 முதல் 30, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 28 முதல் 32, கேரட் ரூ. 60 முதல் 66, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ. 36 முதல் 40, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 16 முதல் ரூ. 20, காளிபிளவர் ரூ.15 முதல் 30, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 80, பூண்டு ரூ. 50, ப.மிளகாய் ரூ. 32 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 32 முதல் 36, நிலக்கடலை ரூ.45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ.20, விலாம்பழம் ரூ.40.

Updated On: 25 Nov 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  7. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  10. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...