முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம்

டாக்டர் சுப்பராயனுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு ராஜ்யசபா எம்பி., ராஜேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம்
X

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனின் சேவைகளை நினைவு கூறும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிகக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாமக்கல்லை பூர்வீகமாக கொண்டவரும், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் ஆவார். பல்வேறு தரப்புகளின் கோரிக்கைகளை ஏற்றும், கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் டாக்டர் சுப்பராயனின் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பூர்வீகமான நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராம பஞ்சாயத்தில் உள்ள நிலம் சர்வே எண்.138/2ஏ1பி -இல் உள்ள மொத்த பரப்பான 0.33.37 ஹெக்டேர் நிலத்தில், அரங்கம் கட்டுவதற்காக நிலமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் அவர்களின் வம்சா வழியினர் மற்றும் அவர்களின் சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் சார்பாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ராஜேஷ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Updated On: 19 April 2023 3:00 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா