/* */

ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய மருந்து வணிகர் சங்கம் வலியுறுத்தல்

ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய மருந்து வணிகர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

HIGHLIGHTS

ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய  மருந்து வணிகர் சங்கம் வலியுறுத்தல்
X

பாரம்பரிய மருந்து வணிகர்களை காக்கவும், சமுதாய சீரழிவை தடுக்கவும், ஆன்லைன் மருந்து வணிகத்தை, மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என மருந்து வணிகர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேசினார்.

நாமக்கல் மாவட்ட, மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மனோகரன், மாநில பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.

சங்க பொதுச் செயலாளர் செல்வன் கூட்டத்தில் பேசியதாவது:-

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை வழிகாட்டுதலின்படி, மனநல மருந்துகள், தூக்க மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்யும்போது, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. முக்கியமான மருந்துகளை அங்கீகாரம் பெற்ற டாக்டரின் புதிய மருந்து சீட்டுக்கு மட்டும் மருந்துகளை கொடுக்க வேண்டும். மருந்து விற்பனை செய்யும்போது நோயாளியின் தொலைபேசி எண்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மருந்து சீட்டின் நகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முன் பின் தெரியாதவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது.

பாரம்பரிய மருந்து வணிகர்களை காக்கவும், சமுதாய சீரழிவை தடுக்கவும், ஆன்லைன் மருந்து வணிகத்தை, மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதில், தலைவராக, அரவிந்தன், செயலாளராக அன்பழகன், பொருளாளராக தெய்வமணி, அமைப்பு செயலாளராக பாபு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். திரளான மருந்து வியாபாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

Updated On: 25 Jan 2023 11:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  7. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  10. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...