மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ஜன.25ல் சிறப்பு முகாம்

நாமக்கல் கோட்டத்தில், மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, ஜன.25ல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ஜன.25ல் சிறப்பு முகாம்
X

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் கோட்டத்தில், விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களின் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் ஆகியவை செய்து கொடுக்க, சிறப்பு முகாம், நாமக்கல் கோட்டத்தில், வரும் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெயர் மாற்றத்திற்கு இறப்புச்சான்று, வாரிசு சான்றிதழ், பங்குதாரர்களின் ஆட்சேபனை இல்லா கடிதம், வருவாய் அலுவலர் சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு வருவாய் அலுவலர் சான்று மற்றும் வரைபடமும், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய, புதிய வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவை கொண்டு வர வேண்டும்.

மேற்கண்ட அனுமதி அளிக்கும்பொழுது விண்ணப்பதாரர்கள் அந்தந்த பிரிவு அலுவலகப்பதிவின்படி தமது தயார் நிலையினையும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இம்முகாம்களை தவறாமல் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே...
 2. தமிழ்நாடு
  மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருதுகள் அறிவிப்பு
 3. சாத்தூர்
  சாத்தூர் அருகே நாய் கடித்து மான் பலியானது
 4. திருநெல்வேலி
  கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வது நபரின் சடலம் ...
 5. ஈரோடு மாநகரம்
  முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு
 6. பெருந்துறை
  கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து கீழ்பவானி பாசன விவசாயிகள்...
 7. குமாரபாளையம்
  மாநில தலைவர் வெள்ளிவிழா ஆண்டையொட்டி பா.ம.க. சார்பில் கொடியேற்று விழா
 8. சினிமா
  ஜூலையில் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி - கமல் வருவாரா?
 9. தமிழ்நாடு
  பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டுமா?: அமைச்சர்...
 10. தொண்டாமுத்தூர்
  பூண்டி வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு