/* */

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி  ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு  விலை உயர்வு
X

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.1,000 விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் சில வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்கை கொள்முதல் செய்கின்றனர்.

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஒரு டன்னுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் ரூ.17 ஆயிரத்துக்கு விலை போனது. தற்போது ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 11 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  5. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  8. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு போறீங்களா? ஆட்டோ கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!